அமைச்சர் பெயரைச் சொல்லி பண மோசடியில் ஈடுபட்ட கும்பல்! பணம் திருப்பி கேட்டால் கொன்றுவிடுவதாக மிரட்டல்!
The gang who swindled money by calling the name of Health Minister Ma Subramanian
சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியர் பெயரைச் சொல்லி பணத்தை சுருட்டிய கும்பல்!
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்த ஜோஸ்பின் என்பவரை ஒரு கும்பல் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளது.
ஜோஸ்பின் பணியாற்றும் தற்காலிக பணியாளர் பதவியை நிரந்தரம் செய்து தருவதாக கூறி கும்பகோணத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் 42 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளார். இதுபோல் 28 பேரிடம் தல 42 ஆயிரம் என மொத்தம் 11 லட்சத்து 76 ஆயிரம் ரூபாயை ஜெயக்குமார் ஏமாற்றியுள்ளதாக தெரிய வருகிறது.
திருச்சியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் முதல்வர் படங்களுடன் பேனர் வைத்து 5 பேர் கொண்ட கும்பல் நேர்காணல் அழைப்பு கொடுத்துள்ளனர். ஒரு வருடமாகியும் தனக்கு பணி நியமன ஆணை தராததால் ஜெயக்குமாரை தொடர்பு கொண்டு அப்பெண் கேட்டுள்ளார்.
இதற்கு ஜெயக்குமார் பணி நிரந்தரம் செய்ய காலம் தாமதமாகும் எனவும் பணம் திரும்பி கேட்டால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டுவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள திருச்சி கண்டோமென்ட் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரைச் சொல்லி ஒரு பெண்மணி பண மோசடியில் ஈடுபட்டு வந்த கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இப்போது சுகாதாரத்துறை அமைச்சர் பெயரில் பண மோசடி செய்த நிகழ்வு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையிலேயே அமைச்சர்கள் பணம் வாங்கிக் கொண்டு வேலையை கொடுக்கிறார்களா? அல்லது அவர்களின் பெயரைச் சொல்லி சமூக விரோதிகள் இச்செயலில் ஈடுபடுகின்றனரா? என சமுக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
English Summary
The gang who swindled money by calling the name of Health Minister Ma Subramanian