விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்ததால் மனைவி-மகளை வெட்டிய கணவர்.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்ததால் மனைவி, மகளை வெட்டிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் அப்துல் கலாம் தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த எட்டு வருடங்களாக தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சந்திரனிடம் விவாகரத்து கேட்டு மனைவி மஞ்சுளா கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையில் தந்தைக்கு எதிராக மகள் ஜெயஸ்ரீ ஆஜரானதால் சந்திரன் ஆத்திரமடைந்து நேற்று இரவு மனைவி மஞ்சுளா மற்றும் மகள், இருவரையும் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

இதையடுத்து பலத்த காயமடைந்த இரண்டு பேரையும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The husband who cut his wife and daughter in tiruvallur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->