#தூத்துக்குடி : தேவாலயத்துக்கு வந்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த "பாதிரியார்" கைது...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் தேவாலயத்துக்கு வந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியாரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை அடுத்த கீழக்கோட்டை சின்னகுளம் பகுதியில் உள்ள திருச்சபையில் பாதிரியாராக பணியாற்றி வருபவர் வினோத் ஜோஸ்வா(40). மேலும் இவர் தேவாலயத்தில் போதனை வகுப்புகள் நடத்தி வந்தார். அப்பொழுது போதனை வகுப்புக்கு வந்த கயத்தாறு பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு 14 வயது முதலே வினோத் ஜோஸ்வா பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

மேலும் பலமுறை பலமுறை மிரட்டி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண் திருமணமாகி தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில் மீண்டும் அந்த பெண்ணிற்கு வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்தப் பெண் இந்த சம்பவம் குறித்து கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வினோத் ஜோஸ்வாவை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The priest who threatened and raped the woman was arrested in Thoothukudi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->