பணியில் ஈடுபட்டிருந்த காவலரின் இருசக்கர வாகனம் திருட்டு..! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள  திருத்தணி அருகே சந்தான கோபாலபுரம் கிராமத்தில் வசிப்பவர் பாபு வயது 30. இவர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ரெயில்வே காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், கடந்த 24-ந் தேதி திருத்தணி ரெயில் நிலையம் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு  வந்துள்ளார். பின்னர் பணி முடிந்து இருசக்கர வாகனத்தை எடுக்க வந்த போது, இருசக்கர வாகனம்  திருட்டு போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

பின்னர் இது குறித்து திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ரெயில் நிலையம் முன்பு காவலரின்  இருசக்கர வாகனம்  திருடபட்ட சம்பவம் திருத்தணியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The two-wheeler of the policeman was on duty was stolen


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->