பரபரப்பு.. அக்காவுடன் காதல்... பெற்றோர் பேச்சு கேட்டு மறுத்ததால்... கொலை செய்த தம்பி.! - Seithipunal
Seithipunal


திருச்சியில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவு முறை தம்பி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சார்ந்த அழகு பாண்டி என்பவரது மகள் ஜோஷிதா. இவர் நமது உறவினர் வீட்டில் தங்கி திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி படித்து வந்தார். இந்நிலையில் முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் ஆயுதங்களால் தாக்கப்பட்ட  காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டுள்ளார் ஜோஷிதா.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது. மேலும் இந்த வழக்கில் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தது. விசாரணையின் முடிவில் அவரது உறவினரும் தம்பி முறையுமான 17 வயது மாணவன் ஜோஷிதாவை கொலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

ஜோஷிதாவும் அந்த மாணவனும் காதலித்து வந்த நிலையில் தம்பி முறை என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக  ஜோஷிதா அந்த இளைஞருடன் பேசுவதை நிறுத்தி இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவன்  ஜோஷிதாவின் கழுத்தை நெரித்து கத்தியால் குத்தி கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளான். இதனைத் தொடர்ந்து அவனை கைது செய்த காவல்துறை சீர்திருத்த பள்ளியில் அடைத்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The younger brother killed his elder sister in a sensational love affair in Trichy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->