நாட்டையே உலுக்கிய குரங்கணி மலையில் காட்டு தீ ஏற்பட்டு 23 பேர் பலியான சம்பவம்.! மீண்டும் மலையேற வனத்துறை அனுமதி!!
நாட்டையே உலுக்கிய குரங்கணி மலையில் காட்டு தீ ஏற்பட்டு 23 பேர் பலியான சம்பவம்.! மீண்டும் மலையேற வனத்துறை அனுமதி!!
8 மாதங்களுக்கு பிறகு, தேனி மாவட்டம் போடி குரங்கணியில் இன்று முதல் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள வனத்துறை மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.
குரங்கணி மலைப் பகுதியில், மலையேற்றப் பயிற்சி மேற்கொள்வதற்காக குரங்கணி முதல் டாப்-ஸ்டேஷன் வரை 16 கி.மீ. தொலைவு தனியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பாதையில் செல்ல போடி வனத் துறை அனுமதி வழங்கி வந்தது.
![](https://img.seithipunal.com/media/forest_fire.jpg)
இதனிடையே, கடந்த மார்ச் மாதம் 11 ம் தேதி 27 பேர் அனுமதியின்றி மலையேற சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக காட்டு தீ ஏற்பட்டு அதில் 23 பேர் உயிர்ழந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து மலையேற்றப் பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டது.
![](https://img.seithipunal.com/media/maxresdefault (3).jpg)
இதையடுத்து, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைச் செயலர் அதுல்ய மிஸ்ரா தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, 23 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
![](https://img.seithipunal.com/media/kurankani deathrise_2018_3_12.jpg)
அந்த அறிக்கையில், மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள புதிய விதிகள் வகுக்கப்பட்டன. இருந்த போதிலும், மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், புதிய விதிகளின்படி மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ளலாம் என வனத் துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, மலையேற்றப் பயிற்சி மேற்கொள்பவர்கள் வனத் துறையினரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். உடல் தகுதிக்கான மருத்துவர் சான்று அவசியம் பெற்றிருக்க வேண்டும். வனத்துறை அனுமதி பெற்ற வழிகாட்டிகள், பயிற்சி மேற்கொள்பவர்களுடன் துணைக்கு செல்வார்கள். மேலும், இவர்களுக்கு அவசர கால தொடர்புகளுக்கு வாக்கி-டாக்கிகள் வழங்கப்படும் என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.