தேனி | மனைவியின் பிடிவாதத்தால் உயிரை மாய்த்து கொண்ட தொழிலாளி! போலீசார் விசாரணை!  - Seithipunal
Seithipunal


தேனி, ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மல்லி கிருஷ்ணன் (வயது 32) இவருக்கும் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் சின்னமனூர் காந்திநகர் பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஐந்து வயதில் மகன் உள்ளார். 

மல்லி கிருஷ்ணனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்படும். இதனால் ஈஸ்வரி தாய் வீட்டிற்குச் சென்று விட்டார். 

இதனால் மல்லி கிருஷ்ணன் ஈஸ்வரியின் தாய் வீட்டிற்கு சென்று தன்னுடன் மனைவியை வருமாறு அழைத்துள்ளார். ஆனால் மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்து மல்லி கிருஷ்ணன் தனக்கு தானே மார்பில் கத்தியால் குத்திக்கொண்டு இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து மயங்கினார். 

இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

theni worker commit suicide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->