சந்தையில் வெங்காயம் விலை மீண்டும் உயர வாய்ப்பு !! - Seithipunal
Seithipunal


உடனடியாக அரசாங்கம் கையிலெடுத்து வெங்காய கொள்முதலை துரித படுத்தாவிட்டால், வெங்காயம் விலை உயர வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட வறட்சி சூழல்களால் வெங்காயத்தின் அறுவடை குறைந்ததாலும், அல்லது அரசாங்க ஏஜென்ஸிக்கள் கொள்முதல் செய்யும் விகிதம் குறைந்ததாலும் கடந்த ஒரு மாதமாக வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்து கொண்டே உள்ளது.

கடந்த மாதத்தில் சமையலறை அத்தியாவசியப் பொருட்களின் சில்லறை விலை சுமார் 20% மற்றும் மொத்த விற்பனை விலை 15% உயர்ந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு சில்லறை விலை கிலோ ரூ.21 ஆகவும், மொத்த விற்பனை விலை குவிண்டால் ரூ.1,581.97 ஆகவும் இருந்தது.

சென்னை, ​​டெல்லி, பெங்களூரு மற்றும் பிற மெட்ரோ நகரங்களில் சில்லறை விலை ரூ.35-40 வரை உள்ளது, இந்த விலை கடந்த மாதம் ரூ.20-25 ஆக இருந்தது. புதிய காரிப் சீசன் பயிர்கள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வரவிருப்பதால் வெங்காயத்தின் விலை மேலும் 50-60 ரூபாய்க்கு மேல் உயரும் என்று சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது சில காலமாக அரசு ஏஜென்சிகளின் வெங்காயம் கொள்முதல் மிகவும் குறைவாக இருந்தது, இது வணிகர்களிடையே நேர்மறையான உணர்வை ஏற்படுத்தியது. "வெங்காயத்தை அரசு குறைவாகக் கொள்முதல் செய்ததால், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் அதிகமாக இருப்பு வைத்து, பின்னர் விலை உயரும் போது விற்க முற்படுகின்றனர்" என்று வேலூரை சேர்ந்த ஒரு வெங்காய வியாபாரி கூறினார்.

அரசால் முடிவு செய்யப்பட்ட கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ. 21 ஆகவும், மொத்த சந்தை விலை ரூ. 25-30 ஆகவும் தற்போது உள்ளது. அதனால் விவசாயிகள் வெங்காயத்தை கொள்முதல் செய்ய அரசாங்க ஏஜென்சிகளுக்கு தராமல், அதிக நேரம் தங்களிடம் இருப்பு வைத்து பின்பு விலை ஏற்றம் அடைந்தவுடன் சந்தைக்கு கொண்டு வருவது வாடிக்கையாகி உள்ளது என ஒரு காய்கறி வியாபாரி கூறினார்.

வெங்காயத்தை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வர விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அரசு கொள்முதல் விலையை உயர்த்தினால் நன்றாக இருக்கும். இது சில்லறை விற்பனை விலையைக் கட்டுப்படுத்துவதோடு, அரசாங்கத்தின் இடையகப் பங்கைச் சேர்ப்பதற்கும் உதவும், ”என்று மற்றொரு காய்கறி வியாபாரி கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

there is a chance to increase in the price of onion


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->