பண்ருட்டி அருகே பரபரப்பு.! மர்ம விலங்கு கடித்து பலியான 30 ஆடுகள்.! - Seithipunal
Seithipunal


பண்ருட்டி அருகே முப்பது ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்ற செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள திருவாமூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமாத்மா. இவரும் இவருடைய மனைவி ஆனந்தியும் சேர்ந்து ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடுகள் தற்போது உள்ளது.

இவர்கள் வழக்கமாக ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற பிறகு, இரவு 10 மணி அளவில் வீட்டில் அருகே உள்ள ஆட்டின் பட்டியில் அடைப்பது வழக்கம்.

இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் ஆடுகள் திடீரென கூச்சலிட்டு அபாய குரல் எழுப்பியுள்ளது. இதனால் திடுக்கிட்டு எழுந்த பரமாத்மா மற்றும் அவரின் மனைவி ஆனந்தி, உடனடியாக ஆடு அடைக்கப்பட்டிருக்கும் பாட்டிக்கு சென்று பார்வையிட்டனர்.

அப்போது 30 ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்த முப்பது ஆடுகளையும் மர்ம விலங்கு ஒன்று கடித்து கொலை செய்திருப்பது தெரிய வரவே, இதுகுறித்து புதுப்பேட்டை காவல் நிலையத்தில் பரமாத்மா மற்றும் அவரின் மனைவி ஆனந்தி புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்துக்கு வந்து இறந்துகிடந்த ஆடுகளை பார்வையிட்டனர். பின்னர் செட்டிபாளையம் கால்நடை மருத்துவரை அழைத்து வந்து, ஆடு இறப்பதற்கான காரணத்தை கேட்டறிந்தனர்.மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பண்ருட்டி பகுதியில் மர்ம விலங்கு கடித்து 30 ஆடுகள் இறந்திருப்பது, ஒருவித பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஐம்பது ஆடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வந்த பரமாத்மா மற்றும் அவரின் குடும்பத்தினர், 30 ஆடுகள் இறந்ததால் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THIRUVAMUR GOATS DEAT


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->