அடுக்கு மாடி குடியிருப்புகளின் பொது சேவை மின் கட்டணம் மூன்று மடங்கு உயர்வு! - Seithipunal
Seithipunal


அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனி மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் நடைபாதை விளக்குகள், மின் மோட்டார் பம்புகள், லிப்ட் போன்றவற்றிற்கு பொது சேவை மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மின் இணைப்புகள் பொது பெயரில் வழங்கப்படும்.

இந்த மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் மற்றும் 500 யூனிட் வரை மானிய சலுகைகளில் மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதன் நிலையில் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த மின் கட்டண உயர்வால் பொது சேவைக்கு புதிய கட்டண விகிதம் ஏற்படுத்தப்பட்டு ஒரு யூனிட் 8 ரூபாய் என நியமிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொது சேவை மின் இணைப்புகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மற்றும் மானிய சலுகைகள் ரத்தாகியுள்ளது.

பழைய மின்கட்டண விகிதத்தை விட தற்பொழுது அமலில் உள்ள மின் கட்டண உயர்வால் 3 முதல் 4 மடங்கு வரை அதிக மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று வாடகை வீடுகளில் வீட்டு பிரிவு மின் இணைப்பு கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மின் நுகர்வோருக்கு அதிக சுமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நடுத்தர மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

தமிழக அரசு பொது சேவை பிரிவுக்கு யூனிட் 8 ரூபாயாக நினைக்கப்பட்ட மின் கட்டணத்தை வீட்டு பிரிவு கட்டணத்திலேயே இலவச மற்றும் மானிய சலுகையில் மின்கட்டணம் வசூலிக்க வேண்டும் என பொதுமக்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Three times increase in public service electricity bill of flats


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->