தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கும்? - சபாநாயகர் பேட்டி.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் உள்ள லலித் கலா அகாடமியில் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்தக் கண்காட்சியை தமிழகத்தின் சபாநாயகர் அப்பாவு நேரில் பார்வையிட்டார். 

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, "சமூகத்தில் பல மாற்றங்களுக்கும், சீர்திருத்தங்களுக்கும், வளர்ச்சிக்கும்  காரணம் புகைப்படங்கள் தான். அப்படிப்பட்ட புகைப்படங்களை இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருப்பது பாராட்டுக்கு உரிய ஒன்று. 

அப்போதெல்லாம் புகைப்பட கலைஞர்கள் ஒரு புகைப்படத்தை எடுத்து அதனை மறுநாள் பத்திரிகையில் பிரசுகரிப்பார்கள்.அந்த புகைப்படத்தை பத்திரிகையில் பார்ப்பதற்கு நாம் அனைவரும் ஆவலாக காத்திருப்போம். 

இப்போது, அந்த நிலைமை மாறி அடுத்த நொடியே நேரலையாக ஒளிபரப்பாகிறது. இவையெல்லாம் புகைப்படத்துறையின் பரிணாம வளர்ச்சி தான். உலகத்தில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தையும் உடனடியாக பார்க்கக்கூடிய விஞ்ஞான வளர்ச்சி பாராட்டுக்குரியது தான் என்றது தெரிவித்துள்ளார். 

மேலும், ஈரோடு இடைத்தேர்தலுக்கு பின்பு தான் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கும் என்பது குறித்த விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn assembly speaker appavu press meet in chennai photos exhibition


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->