ராகுல்காந்தி பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த செல்வப்பெருந்தகை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நாடாளுமடனர தேர்தல் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

"இந்தியா கூட்டணி சார்பாக நாளை மாலை 3 மணிக்கு நெல்லை பெல் மைதானத்தில் நடைபெறும் மாபெரும் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு ராகுல் காந்தி வருகை புரிகிறார்.

அதேபோல, மாலை 6 மணிக்கு கோயமுத்தூர் செட்டிபாளையம் எல்.அன்.டி. பைபாஸ் சாலையில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோடு இணைந்து பங்கேற்கிறார்.

 இந்த தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு அணி அணியாக, அலைகடலென மக்கள் திரண்டு வருகை புரிந்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் இருக்கிறது என்பதை உறுதி செய்ய அன்போடு அழைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn congrass leader selva perunthagai invite raguulgandhi meeting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->