#BigBreaking :: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் கீழ் பணிபுரியும் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வானது 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

அரசு ஊழியர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு கோரிக்கை நிறைவேற்றும் விதமாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வின் காரணமாக தமிழக அரசுக்கு ரூ.2,539 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்களின் நலனை காக்கும் வகையில் இந்த கூடுதல் செலவினை தமிழக அரசு ஏற்றுள்ளது என அறிக்கையின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt increased allowance for govt employees


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->