கட்டாயம் இதை செய்ய வேண்டும் - அரசு பேருந்து நடத்துனர்களுக்கு பறந்த உத்தரவு.! - Seithipunal
Seithipunal


அரசு பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அமைக்கப்பட்ட கைப்பிடியுடன் லாக் செய்ய நடத்துநர்கள் உதவ வேண்டும் என்று போக்குவரத்துக்கு கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"மாநகர போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் தாழ்தள பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் பயணம் செய்ய இருக்கும்போது, சக்கர நாற்காலிகளை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் உள்ள சாய்தளத்தை உபயோகப்படுத்தி பேருந்துக்குள் அவர்கள் ஏற நடத்துனர்கள் உதவிசெய்ய வேண்டும்.

பேருந்தில் பயணம் செய்யும்போது, அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட பகுதியில் சக்கர நாற்காலிகளை பேருந்தில் அமைக்கப்பட்ட கைப்பிடியுடன் லாக் செய்ய நடத்துநர்கள் உதவ வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் ஓட்டுநர் பேருந்தை இயக்கும்போதோ அல்லது பிரேக் போடும் போதோ சக்கர நாற்காலி அங்கும் இங்கும் நகர வாய்ப்புள்ளது. 

அதனால், நடத்துனர்கள் சக்கர நாற்காலியை பேருந்தில் அமைக்கப்பட்ட கைப்பிடியுடன் கவனமாக லாக் செய்ய வேண்டும். அதேபோல், அவர்கள் இறங்கும்போது சாய்தள படிக்கட்டை இயக்கி சக்கர நாற்காலியுடன் பேருந்தில் இருந்து பாதுகாப்பாக இறங்க உதவ வேண்டும். 

மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏறவும், இறங்கவும் எவ்வித புகாரும் வராத வண்ணம் அவர்களுக்கு உதவிசெய்ய ஓட்டுநர், நடத்துநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். ஆகவே, அனைத்து கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் தமது பணிமனை சார்ந்த தாழ்தள பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் பேருந்துகளில் எளிதில் பயணம் செய்ய வரையறுக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt order govt bus conductors help to disabled person travel


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->