ஆசிரியர் தகுதி தேர்வு எதிரொலி | செமஸ்டர் தேர்வை தள்ளிவைத்த தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்! - Seithipunal
Seithipunal


பிப்ரவரி 11, 12 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு (TET) நடக்க இருப்பதால், அதே தேதியில் நடக்கவிருந்த இறுதி பருவத்தேர்வுகள் வரும் மே மாதம் 06, 07 தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பில், "அட்டவணையில் 11/02/2023 மற்றும் 12/02/2023 அன்று நடக்க இருந்த இறுதி பருவத்தேர்வுகள் நடக்க இருந்தது.

இந்நிலையில், மேற்கண்ட அதே தேதியில் தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தகுதி தேர்வு (TET) நடக்கவிருப்பதால், அத்தேதியில் அறிவிக்கப்பட்ட தேர்வுகள் வருகிற 06/05/2023 மற்றும் 07/05/2023 தேதிகளுக்கு தள்ளிவக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறும்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் ஒரு முக்கிய செய்தி :

புதுச்சேரி கதிர்காமம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நாளை (பிப்.10) 37 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் பிப்ரவரி 25ம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும் என புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Open University announce TET


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->