போராடினால் கடும் நடவடிக்கை பாயும்.. ஊழியர்களை எச்சரிக்கும் மின்சார வாரியம்..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முழுக்க நாளை மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். மின்சார ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசுக்கு நீண்ட காலமாக வைத்து வருகின்றனர். ஆனால் இந்த கோரிக்கைகளை தமிழ்நாடு மின் வாரியம் இதுவரை நிறைவேற்றவில்லை.

இந்த நிலையில் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தமிழக முழுவதும் போராட்டம் நடத்த ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அந்த நாளுக்கான ஊதியம் கிடைக்காது என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. போராட்டம் செய்யும் நாள் பணி விடுப்பு நாளாக கருத்தில் கொள்ளப்படும் எனவும், இதை விடுமுறை நாளில் கழித்துக்கொள்ள முடியாது எனவும், மாறாக சம்பள இழப்பு நாளாக கணக்கில் எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகள் ::

உடனடியாக 4 சதவிகிதத்திற்கு மேல் மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தர வேண்டும். தமிழ்நாடு முழுக்க பல்வேறு இடங்களில் தேர்ச்சி பெற்ற 5000 கேங்மேன்களுக்கு உடனே பணி நியமனம் வழங்க வேண்டும். ஏற்கனவே பணி நியமனம் வழங்கப்பட்டு வேறு ஊர்களில் உள்ள கேங்மேன்களுக்கு உள்ளூரில் போஸ்டிங் கொடுக்க வேண்டும்.

2 ஆண்டுகளாக வெளியூரில் வேலை பார்க்கும் கேங்மேன்களுக்கு முன்னுரிமை வழங்கி அவர்களுக்கு உள்ளூரில் போஸ்டிங் போட வேண்டும். ஏற்கனவே இருக்கும் ஒப்பந்த தொழிலாளர்கள், பகுதி நேர பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிபவர்களுக்கு கருவூலத்தில் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

சென்னையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன் தர்ணா போராட்டங்களை மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனால் மின் வாரியம் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. மின் வாரியத்தின் வாரிய செயலாளர் மணிக்கண்ணன் ஊழியர்களின் கோரிக்கை குறித்து செவி சாய்க்காததால் அவரை உடனே மாற்ற வேண்டும் என்றும் மின்வாரிய ஊழியர்கள் குறிப்பிட்டு உள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை சார்பில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் வகித்து வந்த மின்சார துறை தற்போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் தங்கம் தென்னரசு உரிய முடிவு எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு மின்வாரிய ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tneb warned employees that strict action will taken if protest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->