6.84 லட்சம் கோடி ரூபாய்! நிதிக்குழுவிற்கு தமிழ்நாடு அரசால் அளிக்கப்பட்ட அறிக்கையின் முக்கியமான அம்சங்கள்! - Seithipunal
Seithipunal


16 ஆவது நிதிக்குழுவிற்கு தமிழ்நாடு அரசால் அளிக்கப்பட்ட அறிக்கையின் முக்கியமான அம்சங்கள் பின் வருமாறு:

இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட ஒரு மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதுடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.87 சதவீதம் என்ற அளவில் பங்களிப்பினை வழங்குகிறது (தற்போதைய விலையில்). மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 31.55 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தினை அடைவதற்கான பெருங்குறிக்கோளினை இலக்காக தமிழ்நாடு நிர்ணயித்துள்ளது. 

இந்நிலையில், அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 280 இன் கீழ் மத்திய அரசின் வரிவருவாயில் இருந்து மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதியினை பகிர்ந்தளிப்பதைத் தீர்மானிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக 16 ஆவது நிதிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

விரைவான நகரமயமாக்கல், அடிக்கடி நிகழும் இயற்கைப் பேரிடர்கள், உட்கட்டமைப்புகளுக்கான நிதியுதவிகள் மற்றும் மிக அதிகளவிலான வயது முதிர்ந்தோர் மக்கள் தொகை உள்ளிட்ட பல முக்கியமான சவால்களை தமிழ்நாடு எதிர்கொள்கிறது. இந்நிலையில், நிதிக்குழுவினால் பரிந்துரைக்கப்படும் நிதியானது வளங்களை அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கான மாநிலங்களின் நிதி நிர்ணயிப்பது மட்டுமின்றி, எதிர்வரும் ஆண்டுகளுக்கான பொருளாதார மற்றும் நிதி வளர்ச்சியினையும் நிர்ணயிக்கும்.

மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே நிதியினை பகிர்ந்தளிக்க நிதிக்குழு பரிந்துரைக்கிறது. 15 ஆவது நிதிக்குழுவானது மத்திய அரசின் பகிர்ந்தளிக்கக்கூடிய தொகுப்பிலிருந்து 41 சதவீதம் மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. 

இருப்பினும், மொத்த வரி வருவாயில் பகிர்ந்தளிக்கப்பட்ட நிதியானது பரிந்துரைக்கப்பட்ட 41 சதவீதத்திற்கு மாறாக 33.16 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது. கூடுதலாக, ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் 16.83 சதவீதம் என்ற அளவில் மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணமாவது மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதில்லை. ஆகையினால், பரிந்துரைக்கப்படும் பங்கிலிருந்து பகிர்ந்தளிக்கப்படும் நிதியானது குறைந்த அளவிலேயே உள்ளது.

அ. ஒன்றிய அரசால் பகிர்ந்தளிக்கப்படும் நிதியிலிருந்து குறைந்தபட்சமாக மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.

ஆ. 50 சதவீதம், வரி அல்லாத வருவாய்களையும் பகிர்ந்தளிக்கப்படும் நிதிகளின் தொகுப்பில் இணைப்பதற்கு உரிய அரசமைப்புச் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள நிதிக்குழு பரிந்துரைக்க வேண்டும் அல்லது மாறாக, பகிர்ந்தளிக்கக் கூடிய தொகுப்பில் மாநிலங்களுக்கான பங்கினை அதிகரித்து வழங்க வேண்டும்.

இ. மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்கள் பத்து சதவீதத்திற்கு மிகாமல் விதிக்கும் வகையில் ஒரு செயல்முறையினை வரையறுக்க வேண்டும். அதற்குமேல், வசூலிக்கப்படும் கூடுதல் தொகை பகிர்ந்தளிக்கப்படும் தொகுப்பில் இணைக்கப்பட வேண்டும்.

ஈ. மாநில அரசின் பட்டியவில் இடம்பெற்றுள்ள இனங்களின் கீழ் நிறைவேற்றப்படும் நலத்திட்டங்களுக்கு 75 சதவீத பங்களிப்பை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்.

கிடைமட்டப் பகிர்வு - பகிர்ந்தளிக்கப்படும் மாநிலங்களுக்கிடையேயான நிதி முதலாவதாக அமைக்கப்பட்ட நிதிக்குழுவிலிருந்து தமிழ்நாட்டின் பங்கு சதவீதமானது கணிசமான அளவில் குறைந்துள்ளது.

முதலாவது நிதி நிதிக்குழுவின் பரிந்துரையில் வருமான வரியிலிருந்து 15.25 சதவீதமாகவும், ஒன்றிய கலால் வரியிலிருந்து 16.44 சதவீதம் என்ற அளவில் பரிந்துரைக்கப்பட்ட பகிர்ந்தளிக்கப்படும் நிதியின் சதவீதமானது தொடர்ந்து குறைந்து, நாட்டின் மக்கள்தொகையில் 6.12 சதவீதம் அளவு மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டிற்கு தற்போது 4.079 சதவீதமாக குறைந்துள்ளது. அதிகளவிலான செயல்திறன் கொண்ட மாநிலமான தமிழ்நாட்டிற்கு, 9வது நிதிக்குழுவின் பரிந்துரைக் காலம் முதல் அதிகளவு மதிப்பீடுகளான வருமான இடைவெளி அளவுகோல் மற்றும் நீக்கப்பட்ட வரிவசூல் அளவுகோல்களினால் மிகவும் அதிகளவில் பாதிக்கப்பட்டு ரூ.3.57 இலட்சம் கோடி என்ற அளவில் இழப்பினை சந்தித்துள்ளது.

பரிந்துரைகள்:

வருமான இடைவெளி, பரப்பளவு மற்றும் வனம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றிற்கு வழங்கப்படும் மதிப்பீட்டினை 15வது நிதிக்குழுவானது குறைத்து பரிந்துரைக்க வேண்டும் மற்றும் மக்கள் தொகை செயல்திறனிற்கு வழங்கப்படும் மதிப்பீட்டினை அதிகரிக்க வேண்டும்.

பொருளாதார வளர்ச்சிக்கான பங்களிப்பு மற்றும் நகரமயமாக்கல் போன்ற புதிய அளவுகோல்களை நிதிக்குழுவானது
கிடைமட்ட பகிர்விற்கான வரைமுறையில் இணைக்க வேண்டும்.

அதற்கு மாற்றாக, இரண்டாவது தீர்வாக 16வது நிதிக்குழுவானது, மாநிலங்களுக்கிடையேயான பகிர்ந்தளிக்கப்படும் நிதியினை தீர்மானிப்பதற்கு குறைந்த அளவிலான பயனுள்ள அளவுகோல்களில் கவனம் செலுத்தி எளிமையான வரைமுறைகளை பரிந்துரைக்கலாம். நுகர்வோர் திறனை கருத்தில் கொண்டு வருமான இடைவெளியானது சரிசெய்யப்பட வேண்டும், மக்கள் தொகை கணக்கீடானது 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் வேண்டும், மக்கள்தொகை எடுத்துக்கொள்ளப்பட பொருளாதாரத்திற்கான
செயல்திறன், பங்களிப்பு மற்றும் நகரமயமாக்கலுக்கான பங்கு ஆகியவற்றின் அடிப்படையில் கிடைமட்ட பங்கிற்கான வரைமுறைகள்
பரிந்துரைக்கப்பட வேண்டும்.

பேரிடர் மேலாண்மை:

1,076 கிலோ மீட்டர் நீள கடற்கரையினை கொண்டுள்ள தமிழ்நாடு, காலநிலை மாற்றத்தினால் மிக அதிகளவிலான இயற்கை பேரிடர்களான சூறாவளி, வெள்ளம், பூகம்பம், வறட்சி மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகிறது. பேரிடம் நிவாரணம், மறுசீரமைப்பு மற்றும் துயர்தணிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ள அதிக நிதியினை செலவிடவேண்டியுள்ளது. இருப்பினும், மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் நிதித் தேவையை விட குறைந்த அளவிலேயே வழங்கப்பட்டு வருகிறது.

பரிந்துரைகள்

1. மாநில பேரிடர் மேலாண்மை நிதியினை 2026-27 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 50 சதவீதமாக உயர்த்தி, 90:10 என்ற அளவில் ஒன்றிய மற்றும் மாநில நிதிப் பங்கீட்டில் வழங்க வேண்டும்.
2. பரிந்துரை காலத்தில் செயல்படுத்துவதற்கான நிதி அளவுகளில் ஆண்டுக்கு 5 சதவீதம் என்ற அளவிலிருந்து 10 சதவீதம் என்ற அளவில் உயர்த்தப்பட வேண்டும்.
3. கடற்கரையின் நீளம் மற்றும் நகரமயமாக்கல் போன்ற வரையறை உள்ளிட்ட புதிய குறியீடுகளுடன் பேரிடர் குறியீடுகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
4. நகர்ப்புற வெள்ளம் (ரூ.2500 கோடி), வறட்சி நிவாரணம் (ரூ.2000 கோடி) மற்றும் கடலோர மேலாண்மை (ரூ.1000 கோடி) ஆகியவற்றினை மேற்கொள்ள குறிப்பிட்ட நிதியினை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியங்கள் விரைவான நகரமயமாக்களினால், பெரிய மாநிலங்களைவிட தமிழ்நாடானது அதிகளவிலான நகர்ப்புற மக்கள் தொகையினை கொண்டுள்ளது. இதனால், உட்கட்டமைப்பு மற்றும் சேவைகள் அளிப்பதற்கான தேவையானது கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. 

இருப்பினும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியங்களானது தேவைக்கு குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது மற்றும் விழுக்காட்டு அளவீடானது சமமின்றி மிகவும் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியங்களானது, தேசிய அளவில் ஐந்து மடங்கு வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், 13 ஆம் நிதிக்குழு பரிந்துரை காலத்திலிருந்து 15 ஆம் நிதிக்குழு பரிந்துரை காலம் வரையில் மூன்று மடங்கு என்ற அளவில் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது.

பரிந்துரைகள்:

1. உள்ளாட்சி அமைப்புகளுக்கான பகிர்ந்தளிக்கப்படும் மானியமானது பகிர்ந்தளிக்கப்படும் வருவாயில் குறைந்தபட்சம் 5 சதவீதம் என்ற அளவில் அதிகரிக்கப்பட வேண்டும்.
2. கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 50 : 50 என்ற விகிதத்தின் அடிப்படையில் மானியங்களை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
3. நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் தொகையின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையேயான பங்கானது தேசிய சராசரியுடன் கணக்கிடப்பட்டு அளிக்கப்பட வேண்டும்.
4. மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கிடையேயான பகிர்வானது மாநிலங்களால் தீர்மானிக்கப்பட வேண்டும்.
 
மாநிலங்களுக்கான குறிப்பிட்ட மானியங்கள் 
தமிழ்நாட்டின் முதலீட்டிற்கான தேவைகள் 

தொழில்மயமாக்கலுக்கான முதலீட்டுத் தேவைகள் 43,600 கோடி ரூபாய்
நகர்ப்புறங்களில் உள்கட்டமைப்புத் தேவைகள் 5,32,000 கோடி ரூபாய்
மின்சாரத் துறைக்கான நிதி 62,000 கோடி ரூபாய்
பேருந்துகள் மற்றும் பொதுப் போக்குவரத்து முறைகளை நவீனப்படுத்துதல் 7,000 கோடி ரூபாய்
நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் 5,000 கோடி ரூபாய்
இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதார உட்கட்டமைப்புகளுக்கான ஆதரவு 5,000 கோடி ரூபாய்
விளையாட்டு வசதிகளை மேம்படுத்துதல்1,000 கோடி ரூபாய்
மின் ஆளுமை முயற்சிகளுக்கான மானியங்கள்1,000 கோடி ரூபாய்
நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டல் கட்டமைப்புகளை மறுசீரமைத்தல் 5,000 கோடி ரூபாய்
பாரம்பரிய கட்டடங்களைப் பாதுகாத்தல் மற்றும் மறுசீரமைத்தல் 1,200 கோடி ரூபாய்
மாற்றுத்திறனாளிகள் எளிய முறையில் அணுகுவதன்பொருட்டு கட்டமைப்பை மேம்படுத்தலுக்கான மானியங்கள் 500 கோடி ரூபாய்
சுற்றுலாத்துறையின் வளர்ச்சி 1,200 கோடி ரூபாய்
தமிழ்நாட்டில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் மறுசுழற்சி முறையினை மேம்படுத்துதல் 20,000 கோடி ரூபாய்
மொத்தம் 6,84,500 கோடி ரூபாய்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt Central Govt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->