டாஸ்மாக் மது விலை அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் குடிமகன்கள்!! முழு லிஸ்ட் இதோ!!
TNgovt increased Tasmac liquor price
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் ஐஏஎஸ் அனைத்து மண்டல டாஸ்மாக் மேலாளர்களுக்கும் இன்று சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.
அந்த சுற்றறிக்கையில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதை ஆவணங்களுடன் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்கள் பணியிட நீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
![](https://img.seithipunal.com/media/PicsArt_07-19-01.38.01-pe347.jpg)
இதனால் டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.10 வசூலிக்கப்படுவது நிறுத்தப்படும் என குடிமகன்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அதிர்ச்சிகரமான செய்தியை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து அரசு டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் அனைத்து வகையான மது பாட்டில்களின் விலையை டாஸ்மாக் நிர்வாகம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு குவாட்டர் மது பாட்டில் ரூ.10 மற்றும் 750 மி.லி அளவுள்ள ஒரு ஃபுல் மது பாட்டில் ரூ.240 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TNgovt increased Tasmac liquor price