சென்னை மது பிரியர்களே கவனம்! உங்கள் கவலை போக்க டாஸ்மாக் கொண்டுவரும் அதிரடி மாற்றம்! அடுத்த மாதம் தமிழகம் முழுவதும்! - Seithipunal
Seithipunal


சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வாங்கும் மதுபானங்களுக்கு இன்னும் இரண்டு வாரங்களில் பில் வழங்கும் நடைமுறை அமலுக்கு வருகிறது.

டாஸ்மாக் கடைகளில் எம்.ஆர்.பி. விலையை விட 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாக சில கடைகளில் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. 

அத்தகைய புகார்களை முற்றிலும் நீக்குவதுடன், கடைகளில் எவ்வளவு சரக்கு விற்பனையாகி, எவ்வளவு இருப்பு உள்ளது என்பதை கண்காணிக்க, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கணினி ஒருங்கிணைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், அரக்கோணம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 14 டாஸ்மாக் கடைகளில் கையடக்க கருவி மூலம் பில் வழங்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகளை தொழில்நுட்ப வல்லுனர்கள் சரி செய்தனர்.

தொடர்ந்து, இவ்விரு மாவட்டங்களில் உள்ள 110 டாஸ்மாக் கடைகளில் கையடக்க கருவி மூலம் பில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இனி இரண்டு வாரங்களில் சென்னை புறநகர் பகுதிகளிலும் இதே நடைமுறை அமல்படுத்தப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் டிசம்பர் மாதத்திற்குள் தமிழகத்தில் உள்ள 4,829 டாஸ்மாக் கடைகளிலும் இந்த டிஜிட்டல் ஒருங்கிணைப்பு அமைக்கப்பட்டு பில் மற்றும் பார்கோடு ஸ்கேனர் வசதி வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt TASMAC Billing System soon in chennai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->