அதிமுக பொதுக்குழு வழக்கில் நீதிபதி விலகல்!...வெளியான அதிர்ச்சி காரணம்! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், அதிமுக-வின் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்  செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன்  உள்ளிட்டோர் சென்னை உயர்  நீதிமன்றத்தில் உரிமையியல் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்  நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்  நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு, இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது,  அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள் மீதான இந்த வழக்கில், ஏற்கனவே விசாரிக்கப்பட்டு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த வழக்குகளில் இருந்து தான் விலகுவதாக தெரிவித்துள்ளார். இது தற்போது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த வழக்கினை  வேறு நீதிபதி முன்பு பட்டியலிடும் வகையில் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதாக நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Judge withdraws in aiadmk general committee case the reason for the shock


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->