சிறுமியிடம் சில்மிஷம் செய்த பாதிரியார் போக்சோவில் கைது..!! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தை அடுத்த ஊத்துக்குளி நல்லகவுண்டம்பாளையம் அருகே உள்ள கூனம்பட்டி புதூரை சேர்ந்த பாதிரியார் ஆண்ட்ரூஸ் என்பவர் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். அந்த விடுதியில் அரசு பள்ளி மாணவ மாணவிகள், தனியார் நிறுவனங்களுக்கு வேலை செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் தங்கி வருகின்றனர். இந்த விடுதியில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் கிருத்துவ ஜெபக்கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்களது 14 வயது மகள் மற்றும் 13 வயது மகனை அந்த விடுதியில் தங்க வைத்துள்ளனர். கடந்த வாரம் கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி விடுதியில் தங்கி உள்ள மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வீட்டுக்கு சென்றனர். அப்பொழுது 14 வயது சிறுமி பாதிரியார் ஆண்ட்ரூஸ் தன்னிடம் பாலியல் ரீதியில் தொல்லை கொடுப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் "பாதிரியார் ஆண்ட்ரூஸ் 15 நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மாலையில் நடந்த ஜெப கூட்டத்திற்கு தனது மகள் செல்லாததால் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்ததோடு வெளியில் சொல்லக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார்" என புகார் அளித்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் பாதிரியார் ஆண்ட்ரூசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPolice arrested Priest in POCSO for sexual molesting a girl


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->