பார் சரியில்லன்னா வீட்டுல குடிங்க - பரபரப்பு தீர்ப்பு வழங்கிய மதுரை உயர்நீதிமன்ற கிளை.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ”மதுபானக் கடைகளுடன் இணைந்து செயல்படும் பார்களில் கழிப்பறை, இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. 

பார்களில் விற்பனை செய்யப்படும் அசைவ உணவுகள் மற்றும் உணவு பண்டங்கள் காலாவதியானதாக உள்ளது. அவை கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. மது அருந்தும் மது பிரியர்களுக்கு இதனால் உடல்நலக்குறைவு மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. 

ஆகவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படும் மதுபான பார்களில் சுகாதாரத்தை பாதுகாப்பதுடன், உணவுப் பொருட்கள் காலாவதியானது மற்றும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ”தமிழகத்தில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது போன்ற கோரிக்கைகளை நீதிமன்றம் ஊக்குவித்தால் மதுப்பழக்கத்தை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும். அதனால், மனுதாரர் தேவைப்பட்டால் மதுவை மதுபானக் கடையில் வாங்கிச் சென்று வீட்டில் வைத்து அருந்திக் கொள்ளலாம்” என்று தெரிவித்து மனுவையும் தள்ளுபடி செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today hearing tasmac bar no cleaning case in madurai high court


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->