தக்காளி விலை மீண்டும் உயர்வு.!! இல்லத்தரசிகளுக்கு ஷாக்!!
Tomato prices rise again in Chennai
தென்மேற்கு பருவமழை காரணமாக கிலோ ரூ.200 வரை விற்பனையான தக்காளி கடந்த சில வாரங்களாக கணிசமாக குறைந்து வந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று மொத்த விற்பனையில் கிலோ ரூ. 20 விற்கப்பட்ட தற்காலிக இன்று ரூ. 30க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மற்றும் அண்டை மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நாள்தோறும் 1200-ல் இருந்து 1,500 டன் தக்காளி வரத்து இருந்தது.
இந்த நிலையில் அண்டை மாநிலங்களிலிருந்து சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரவேண்டிய தக்காளி வரத்து கணிசமான குறைந்ததால் இன்று கிலோவுக்கு ரூ. 10 உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் கிலோ ரூ. 65 வரை உயர்ந்துள்ள நிலையில் தற்போது தக்காளி விலையும் கணிசமாக உயர தொடங்கி இருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
Tomato prices rise again in Chennai