மதுரையில் சோகம்!...பாலியல் அவதூறு பேச்சால் உயிரை மாய்த்த ஆட்டோ ஓட்டுநர்! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம், பைகாரா பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான பிரகாஷ் என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்றிருந்ததாக கூறப்படும் நிலையில், அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் பிரகாஷ் குறித்து அவதூறாக பேசியதாக சொல்லப்படுகிறது.

தொடர்ந்து வெளியூரில் இருந்து ஊர் திரும்பிய பிரகாஷ், இது குறித்து தகவலறிந்து தன்னால்  ஊருக்குள் வருவதற்கு அவமானமாக இருப்பதாக கூறி வீடியோ வெளியிட்டு நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள அச்சம்பத்து பகுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பிரகாஷ் வீடியோவில் கூறியிருப்பதாவது, குளிர்பானத்தில் மயக்க மருந்தினை கலந்து நான்  ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக ஊர் முழுக்க தன்னைப் பற்றி ராஜா என்பவர் அவதூறு பரப்பியுள்ளார். என்னை ஊருக்குள் செல்ல முடியாத நிலைக்கு தள்ளி விட்டனர். என் சாவுக்கு ராஜா என்பவர்தான் காரணம் என்று தெரிவித்துள்ள நிலையில், பிரகாஷ் குடும்பத்தினர் ராஜாவை கைது செய்யக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tragedy in madurai auto driver killed himself due to sexual abuse


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->