திருப்பத்தூர் அருகே சோகம் : வேலைக்குச் சென்று வீடு திரும்பிய அண்ணன், தம்பி பலி!...என்ன நடந்தது? - Seithipunal
Seithipunal


திருப்பத்தூருக்கு வேலைக்கு சென்று வீடு திரும்பிய சகோதர்கள் இருவரும், சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் அருகே, அத்திமரத்துபள்ளம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், ரமேஷ் சகோதரர்கள் இருவரும் பிளம்பர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் நேற்று திருப்பத்தூருக்கு வேலைக்கு சென்றிருந்த நிலையில், வேலையை முடித்துவிட்டு வழக்கம் போல் இன்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது திருப்பத்தூர் மாவட்டம், கள்ளேரி பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரி மீது ராஜேஷ், ரமேஷ் இருவரும் வந்த இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கந்திலி போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலைக்கு சென்று வீடு திரும்பிய சகோதர்கள் இருவரும் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tragedy near Tirupattur Brother who returned home from work brother killed What happened


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->