திருச்சியில் அரசு பள்ளி ஆசிரியர்க்கு கத்தி குத்து! மாணவர்களின் மோதலை தடுக்க சென்றபோது அரங்கேறிய கொடூரம்! - Seithipunal
Seithipunal


திருச்சி, ஸ்ரீரங்கத்தில் பள்ளி மாணவர்கள் அரிவாளால் வெட்டியதில், பள்ளி ஆசிரியர் படுகாயம் அடைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

ஸ்ரீரங்கம் பகுதியில் அரசு உதவிபெறும் ஆண்கள் மேல்நிலை பள்ளி ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இருவர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருந்தனர்.

மாணவர்களுக்குள் நடந்த மோதலை தடுக்கச் சென்ற வணிகவியல் ஆசிரியர் உடன், பள்ளி மாணவர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளதாகவும், அவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இது குறித்து வெளியான முதல் கட்ட தகவலின் படி, இன்று மாலை 3:30 மணிக்கு கடைசி பாட வகுப்பு நடந்து கொண்டிருந்தது, அப்போது இரண்டு மாணவர்களுக்கு இடையே வகுப்பறைகளிலேயே வாக்குவாதம் ஏற்பட்டு, இருவரும் ஒருவரை ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். 

மேலும், ஏற்கனவே இந்த இரண்டு மாணவர்களுக்கும் இடையே முன்பகை இருந்ததால், ஒரு மாணவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் எடுத்து, மற்றொரு மாணவரை கையில் வெட்டி உள்ளார்.

அப்போது வணிகவியல் ஆசிரியர் சிவகுமார், தாக்குதல் நடத்திய மாணவனை தடுக்க முயன்ற போது, ஆசிரியர் தலையிலும் ஒரு அரிவாள் விட்டு விழுந்துள்ளது. 

இதில் பலத்த காயமடைந்த ஆசிரியர் சிவக்குமார் மற்றும் மாணவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டால் மட்டுமே, இந்த மாணவர்களுக்குள் ஏன் முன் பகை வந்தது? எதனால் கொலை செய்யும் அளவுக்கு சென்றது என்பது குறித்து தெரிய வரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Govt School Teacher Attacked Student


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->