பொங்கல் பரிசு உடன் ரூ.1000! அமைச்சர் உதயநிதி கொடுத்த அப்டேட்!
udhayanithi say about 2024 Pongal Gigt 1000 rupee issue
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பணம் வழங்கப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, முதலமைச்சர் முக ஸ்டாலின் தான் இதுகுறித்து முடிவெடுப்பார் என்று அமைச்சர் உதயநிதி பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை மற்றும் முழுக் கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
வழக்கம்போல 1000 ரூபாய் ரொக்கப்பணம் வழங்குவது குறித்த தமிழக அரசின் இந்தாண்டு அறிவிப்பில் ஏதும் இடம்பெறவில்லை. இதனால், இந்த வருடம் 1000 ரூபாய் ரொக்கப்பணம் வழங்காமல் தமிழக அரசு தவிர்த்துள்ளதாக செய்திகள் பரவின.
இந்நிலையில், வடசென்னை பகுதியில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் செய்தியாளர்கள், 1000 ரூபாய் ரொக்கப்பணம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி, "பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பணம் வழங்குவது குறித்து முதல்வர் முடிவு எடுப்பார்" என்று தெரிவித்தார்.
English Summary
udhayanithi say about 2024 Pongal Gigt 1000 rupee issue