குடிச்சிட்டு வாகனம் ஓட்டுறது தப்புன்னா.. டாஸ்மாக் பாருல எதுக்கு பார்க்கிங்? - போலீசாரிடம் வாக்குவாதம் செய்த பெண்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம், உடுமலை தளி ரோட்டில் இரவு நேரத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் லேசான தள்ளாட்டத்துடன் வரவே, போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்வதற்காக வாகன ஓட்டியை 'வாயை ஊது' என்று சொல்லியுள்ளனர். 

இதனால் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர், தன் மனைவிக்கு போன் செய்து வரவழைத்தார். சம்பவ இடத்திற்கு வந்த வாகன ஓட்டியின் மனைவி, கடுஞ்சினத்துடன்  வாக்குவாதம் செய்தார்.

குறிப்பாக "குடிச்சிட்டு வாகனம் ஓட்டுறது தப்புன்னா., பாருல எதுக்கு பார்க்கிங்?" என்று கேள்வி எழுப்பியதுடன், டாஸ்மாக் பார்ல குடிச்சிட்டு ரோட்லயா படுத்துக்க முடியும்? வீட்டுக்கு வரணும் தானே, அப்போ நீங்க எப்படி பிடிக்கலாம்? என்றும் கேள்வி கேட்டார்.

மேலும், மதுக்கடைகளை திறக்கிறது தப்பில்லனா, குடிக்கிறது எப்படி தப்பாகும்? அவர் சாராயமா காய்ச்சி குடித்திருக்கிறாரா? அரசாங்கம் விற்கும் மதுவைத் தானே வாங்கி குடித்தார்" என்று பாயிண்ட் பாயிண்டாக பேசினார்.

இதையெல்லாம் கண்டுகொள்ளாத போலீசார், சட்டம் தன கடமையை செய்யும் என்று கூறி, அந்த பெண்ணின் கணவரை பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு அழைத்தார்.

அப்போது அந்த பெண், "குடிச்சத தான் நாங்களே ஒத்துக்கும் போது, எதுக்கு டெஸ்ட் எடுக்கனும்? எங்கேயும் வரமுடியாது" என்று சொல்ல, போலீசார் அந்த நபரின் இருசக்கர வாகனத்தை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UDUMALAI TASMAC BAR DRUNK ISSUE


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->