சென்னையின் பிரதான சாலையில் மர்ம பெட்டி.. அதிர்ந்து போன வாகன ஓட்டிகள்.!  - Seithipunal
Seithipunal


சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த ராஜேஷ் என்ற 30 வயது ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையத்திற்கு ஒரு தகவல் கொடுத்தார். அந்த தகவலில் சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் ராஜீவ் நகர் சிக்னல் அருகே மர்ம பெட்டி ஒன்றை கிடைப்பதாக தெரிவித்து இருந்தார். 

இதனால் பதற்றம் அடைந்த போலீசார் நேரில் சென்று பெட்டியை கைப்பற்றி திறந்து பார்த்த பொழுது அந்தப் பெட்டிக்குள் கட்டுக்கட்டாக வெள்ளை தாள்களும், இங்க் பாட்டில்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த காகிதங்கள் மற்றும் இங்க் பாட்டில்கள் கள்ளநோட்டு அடிக்க பயன்படுத்தக்கூடிய உபகரணங்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

எனவே இந்த பெட்டியை வீசி சென்றவர்கள் யார் என்பதை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்குப் பின் வேறு காரணங்கள் இருக்குமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

சாலையின் நடுவில் இந்த பெட்டி கடந்ததால் வாகன ஓட்டிகள் மிரட்சியுடன் அதனை கடந்து சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

unknown suitcase in omr road


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->