பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - எந்த மாவட்டத்தில் தெரியுமா?
vdharanyam taluka schools holiday
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் எழுந்தருளியுள்ள வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் அருள்மிகு ஸ்ரீதியாகராஜர் சுவாமிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி 20.02.2024 செவ்வாய் கிழமையான நாளை நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் அருள்மிகு ஸ்ரீதியாகராஜர் சுவாமிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெறும். விழா நாட்களில் காலை, மாலையில் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் சிறப்பு அலங்காரத்தில் தியாகராஜசாமி தேரில் எழுந்தருள உள்ளார். இதைத்தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதனால் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை ஒருநாள் மட்டும் உள்ளுறை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
vdharanyam taluka schools holiday