கரை புரண்டு ஓடும் வெள்ளம் - ஊத்தங்கரையில் அடித்து செல்லும் வாகனங்கள்.! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் பெய்த அதி கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

மேலும் ஏரியில் இருந்து வெளியேறும் நீரால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வெள்ள நீரில் வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்து சிறியது முதல் கனரக வாகனங்கள் வரை கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் உள்ளது.

இதையடுத்து வாகனங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vehicles run flood in uthangarai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->