#வேலூர் || மிஸ்டுகாலில் சிக்கிய பள்ளி மாணவி., காதல்வலைவீசி கடத்திச்சென்று பலாத்காரம்.! - Seithipunal
Seithipunal


மிஸ்டுகால் மூலம் பள்ளி மாணவிக்கு காதல் வலை வீசி பலாத்காரம் செய்த 19 வயது வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு இவருடைய செல்போனுக்கு தவறுதலாக வந்து உள்ளது.

யார் மிஸ்டு கால் கொடுத்தது என்று விவரம் கேட்க மனைவி மறுபடியும் அழைக்கவே, மறு முனையில் திருவள்ளூர் மாவட்டம், தரைச்சி ஊத்துக்கோட்டை பழைய காலனியை சேர்ந்த ஜான்ரோஸ் (19வயது) என்ற வாலிபர் பேசியுள்ளார்.

'தான் தவறுதலாக உங்களுக்கு அழைப்பு விடுத்துவிட்டேன்' என்று ஜான்ரோஸ் தெரிவித்து உள்ளார். பின்னர், அந்த சிறுமிக்கு ஜான்ரோஸ் காதல் வலை வீசியுள்ளார். ஜான்ரோசின் காதல் வலையில் விழுந்த பள்ளி மாணவி, அவரை வேலூருக்கு வரவைத்து அடிக்கடி சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்ற மாணவியை, ஜான்ரோஸ் திருவள்ளூரில் உள்ள அவரது வீட்டுக்கு கடத்தி சென்று விட்டார்.

பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால் பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்துவிட்டு, கடைசியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் மாணவியின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை செய்ததில், மாணவியின் செல்போனுக்கு ஜான்ரோஸ் அடிக்கடி போன் செய்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து ஜான்ரோஸ் வீட்டுக்கு நேரடியாக சென்ற போலீசார், அங்கிருந்த மாணவியை மீட்டு விசாரணை செய்ததில், மாணவியை ஜான்ரோஸ் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது ஜான்ரோஸை செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vellore school girl kidnap and abused


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->