#Breaking | விநாயகர் சதுர்த்தி.. சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு., அரசின் முக்கிய அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


இந்த வருடம் ஆவணி 11ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வருகிறது. வரும் செப்டம்பர் 31-ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த விநாயகர் சதுர்த்திக்கு முன்னேற்பாடுகள் இப்போதே துவங்கிவிட்டது. நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட படக்கூடிய பண்டிகை தான் இந்த பிள்ளையார் சதுர்த்தி.

இந்நிலையில், நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தற்போது சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி சென்னையில் இருந்து 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றது. பயணிகளின் வசதிக்காக தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் முன் பதிவு செய்து தங்களது ஊருக்கு செல்லலாம். 

மேலும் அங்கிருந்து பயணிகள் சென்னைக்கு திரும்பவும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. அரசின் சேவையை அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vinayagar Chadhurthi special Bus allocated


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->