தமிழக பொதுத்துறை கூடுதல் செயலாளர்,  விழுப்புரம் குற்றப்பிரிவு டிஎஸ்பி-க்கு பிடிவாரண்ட்! - Seithipunal
Seithipunal


நீதிமன்ற உத்தரவின்படி, 97 வயது சுதந்திர போராட்ட வீரருக்கு ஓய்வூதிய பாக்கியை வழங்காத தமிழக பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தற்போதுவரை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சுதந்திர போராட்ட வீரர் வேலு, சென்னை உயரநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த 10 நாட்கள் அவகாசம் வழங்கியும் ஓய்வூதிய பாக்கி தொகை வழங்கப்படாததால் தமிழக பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த பிடிவாரண்டை செயல்படுத்தி, வரும் ஜூலை 8ம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, சென்னை காவல் ஆணையருக்கு நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல், தொடர்ந்து 3 முறை சம்மன் அனுப்பியும் சாட்சியம் அளிக்க ஆஜராகவில்லை என்று, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ராமலிங்கத்துக்கு பிடிவாரண்ட் விதித்தது சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை தரமணியைச் சேர்ந்த தச்சுத்தொழிலாளி செந்தில், தனது மளிகை கடை முன் நின்று பேசிக் கொண்டிருந்த வினோத் என்பவரை துரத்தியபோது, ஆத்திரத்தில் செந்திலை வழிமறித்து அரிவாளால் வெட்டிய வழக்கு சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க ஆஜராகும்படி, வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ராமலிங்கத்துக்கு 3 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில் விழுப்புரம் மாவட்ட  டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட் விதித்து சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Warrant against Tamil Nadu Public Sector and vilupuram DSP


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->