ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்தது காங்கிரஸ் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் - ஜேபி நட்டா! - Seithipunal
Seithipunal


இந்தியா ஜனநாயகத்தின் தாய். ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்தது காங்கிரஸ் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஜனநாயகத்தின் கருப்பு தின விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் தேசிய பாஜக தலைவருமான ஜே.பி நட்டா கலந்து கொண்டார்.

விழாவில் பேசுகையில், இன்று ஜனநாயகம் வலுவாக உள்ளது. தேர்தல் என்ற மிகப்பெரிய திருவிழாவை கொண்டாடியுள்ளோம். இந்தியா ஜனநாயகத்தின் தாய். அத்தகைய ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்தது காங்கிரஸ் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து பேசுகையில், இந்திரா காந்தி அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி தனது நாற்காலியை காப்பாற்ற முயன்றார். அந்த பிறகு நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்பட்டது. அந்தப் போராட்டத்தை நிறுத்த இந்திரா காந்தி ஜூன் 25ஆம் தேதி 1975 ஆம் ஆண்டு இரவு அவசர நிலையை அறிவித்தார் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

We must remember that Congress is the strangler of democracy JP Natta


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->