மாணவர்கள் செல்வதற்கு கூடுதல் பேருந்துகளை இயக்குமா? தமிழக அரசு - பெற்றோர்கள் கேள்வி..! - Seithipunal
Seithipunal


ஆரணியில் இருந்து வேலூர் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகவும் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணிப்பதால் கூடுதல் பேருந்துகள் இயக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, சேத்துப்பட்டு, போளூர், கண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் வேலூர் மாநகரில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர்.

மாணவர்கள் தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிப்பது வழக்கமான ஒன்று. குறிப்பாக காலை வேளையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அதிக அளவில் பேருந்துகளில் பயணிப்பதால் மாணவர்கள் பேருந்துகளில் பயணிக்க முடியாமல் படியில் தொங்கிய நிலையில் செல்கின்றனர். இதனால் மாணவர்கள் பெரும் அவதிப்படுகின்றனர். அதிக பயணிகள் செல்லும் பேருந்துகளில் ஆபத்தான முறையில் படிகளில் தொங்கி மாணவர்கள் பயணிப்பது காண்போரை கதிகலங்க வைக்கிறது.

போலீசார், மாணவர்களை பேருந்தில் உள்ள படிகளில் தொங்கி பயணிக்க வேண்டாம் என பலமுறை எச்சரித்தும், மாணவர்கள் அதைக் கண்டுகொள்ளாமல் ஆபத்தான நிலையில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிய நிலையில் பயணித்து வருகின்றனர். இதன் காரணமாக பள்ளி, கல்லூரி வேலைகளில் ஆரணி மற்றும் கண்ணமங்கலம் மார்க்கமாக வேலூர் வரை கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், மாணவர்கள் ஆபத்தான நிலையில் பயணிப்பதை தடுக்க பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று அரசு கூடுதல் பேருந்துகளை இயக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

will it aditional bus run for students


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->