சேலம் மாவட்டம்.! தனியார் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் தனியார் பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள சின்னசோரகை கிராமம் தேங்காய் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் கோபி(வயது 25) கல் உடைக்கும் தொழிலாளி ஆவார்.

இவர் நேற்று நாயக்கன்பட்டி சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது ஈரோட்டிலிருந்து ஓமலூர் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக கோபியின் மோட்டார்சைக்கிள் மீது பலமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் தூக்கி வீசப்பட்ட கோபி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தாரமங்கலம் போலீசார் கோபியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Worker killed in private bus collision in salem


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->