தெற்கு அந்தமானில் மேலடுக்கு சுழற்சி - தமிழகத்திற்கு பாதிப்பு விளைவிக்குமா?
atmospheric circulation formed south andhaman
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதற்கிடையே வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுவிழந்து வருகிறது. அந்த வகையில் தற்போது தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: "தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது.
இந்த மேலடுக்கு சுழற்சி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை மறுநாள் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். இது தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
மேலும் இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாடு-இலங்கை கடற்கரைகளை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
English Summary
atmospheric circulation formed south andhaman