அமெரிக்கா : புளோரிடாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். 

அமெரிக்கா புளோரிடா மாகாணத்தின் லேக்லேண்ட் நகரில் உள்ள அயோவா அவென்யூ பகுதியில் நேற்று முன்தினம், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது, அவ்வழியாக காரில் வந்த முகமூடி அணிந்திருந்த நான்கு பேர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். 

இதையடுத்து அங்கிருந்து காரில் சென்ற துப்பாக்கிச் சூடு நடத்திய 4 மர்ம நபர்கள் அருகில் உள்ள பிளம் ஸ்ட்ரீட் பகுதியில் நடந்து சென்றவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இIந்நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அயோவா அவென்யூ நார்த் மற்றும் பிளம் ஸ்ட்ரீட் அருகே நடந்த இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் காயமடைந்த 10 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் இரண்டு பேர் கவலைக்கிடமாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து காவல்துறைத் தலைவர் சாம் டெய்லர் கூறும்பொழுது, துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து அடர் நீலம் மற்றும் நான்கு கதவுகள் கொண்ட கார் ஒன்று சென்றதாகவும், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 injured in shooting in America Florida


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->