பிரேசிலில் திருவிழாவின் போது தொங்கு பாலம் அறுந்து விபத்து - 3 பேர் மாயம் - Seithipunal
Seithipunal


தெற்கு பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் மம்பிடுபா ஆற்றின் மீது உள்ள தொங்கு பாலம் அருந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் ஆற்றில் விழுந்தனர்.

பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் உள்ள ​​டோரஸ் பகுதியில் நடைபெற்ற திருவிழாவை காண்பதற்காக அதிகாலையில் ஏராளமானோர் திரண்டு இருந்தனர். அப்பொழுது நூற்றுக்கும் மேற்பட்டோர் டோரஸ் மற்றும் பாஸ்ஸோ டி டோரஸை இணைக்கும் மம்பிடுபா ஆற்றின் மீது உள்ள தொங்கு பாலத்தில் நின்றிருந்த போது திடீரென பாலம் அறுந்து விழுந்தது.

இதில் பாலத்தில் நின்றிருந்த அனைவரும் ஆற்றுக்குள் விழுந்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர் மேலும் மூன்று பேர் மாயமாகியுள்ளனர். தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 people missing after suspension bridge collapses in Brazil


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->