பிரேசிலில் ஹெலிகாப்டர் விபத்து - 4 பேர் உயிரிழப்பு
4 died in helicopter accident in brazil
தென் அமெரிக்க நாடன பிரேசிலில் சாவ் பாலோவின் பகுதியில் ஏர் டாக்ஸி நிறுவனத்திற்கு சொந்தமான ராபின்சன் R44 ரேவன்-II கடற்கரை நகரமான குருஜாவிலிருந்து சாவ் பாலோ நோக்கி சென்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது சாவ் பாலோவின் பார்ரா ஃபண்டா பகுதியை கடக்கும்பொழுது கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புபடையினர், ஹெலிகாப்டர் விபத்தினால் ஏற்பட்ட தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் ஹெலிகாப்டரில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையில் விழுந்ததால், அங்கு சென்று கொண்டிருந்த 9 வாகனங்களும் ஒன்றும் ஒன்று மோதி சேதமடைந்துள்ளது. இதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஹெலிகாப்டரின் மாதிரிகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
4 died in helicopter accident in brazil