பிரேசில்: விளையாட்டில் தோல்வி அடைந்ததை பார்த்து சிரித்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு - 7 பேர் பலி - Seithipunal
Seithipunal


பிரேசிலில் விளையாட்டில் தொடர்ச்சியாக இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்தவரை பார்த்து சிரித்த 12 வயது சிறுமி உட்பட 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

பிரேசிலில் மாட்டோ க்ரோஸ்ஸோ மாநிலத்தில் உள்ள சினோப் சிட்டி பகுதியில் உள்ள கிளப்பில் பில்லியர்ட்ஸ் விளையாட்டில் எட்கர் ரிக்கார்டோ டி ஒலிவேரா என்ற வீரர் தொடர்ச்சியாக இரண்டு ஆட்டங்களில் தோல்வி அடைந்ததால் கிளப்பில் இருந்தவர்கள் அவரைப் பார்த்து சிரித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், நண்பர் எஸேகியாஸ் சௌசா ரிபெய்ரோவுடன் சேர்ந்து கிளப்பில் இருந்தவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதனால் அங்கிருந்த அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓடிய நிலையில் 12 வயது சிறுமி உட்பட 7 பேர் துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இதில் உயிரிழந்தவர்கள் லாரிசா ஃப்ராசோ டி அல்மெய்டா(12), ஒரிஸ்பெர்டோ பெரேரா சோசா, அட்ரியானோ பால்பினோட், கெட்லியோ ரோட்ரிக்ஸ் ஃப்ராசோ ஜூனியர், ஜோசு ராமோஸ் டெனோரியோ, மற்றும் மசீல் புருனோ டி ஆண்ட்ரேட் கோஸ்டா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 killed in shooting at people laughing at sports defeat in Brazil


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->