வேற்றுகிரகவாசிகள் குறித்து எச்சரித்த நபரை, கைது செய்த போலீஸ்.!
america florida young men warns about alian
29 வயது இளைஞர் ஒருவர் அமெரிக்காவில் வேற்று கிரக உயிரினங்கள் குறித்த தகவல்களை அதிபரிடம் இருந்து தான் பெற்றதாக கூறி அவர் திருடிய ட்ரெக்கிங் மூலம் விண்வெளி படை தளத்தில் நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட இளைஞரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த கோரி ஜான்சன் என்ற 29 வயது நபர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் பேட்ரிக் ஸ்பேஸ் தளத்திற்கு செல்ல ஒரு அதிபரின் டிரக்கை திருடியுள்ளார். இவர் விண்வெளி படை தளத்தில் நுழைய முயற்சித்தபோது அவரை விண்வெளி படையைச் சேர்ந்தவர்கள் கைது செய்துள்ளனர்.
அவர் தான் வேற்று கிரகவாசிகள் குறித்து சில தகவல்களை அதிபரிடம் இருந்து பெற்றதாகவும், இதுகுறித்து எச்சரிக்கை செய்வதற்காக தான் இதனை செய்தேன் என்றும் போலீசாரிடம் கூறியுள்ளார்.
English Summary
america florida young men warns about alian