உச்ச நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு!...கார் வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


பிரேசில் நாட்டில் உள்ள உச்ச நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று குண்டு வெடிப்பினால் வெடித்து சிதறிய சம்பவத்தில், தாக்குதல் நடத்திய நபர் உயிரிழந்தார்.

பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று நேற்று முன்தினம் குண்டு வெடிப்பினால் திடீரென  வெடித்து சிதறியது. இதில் யாருக்கும் எந்த வித காயம் ஏற்படாத நிலையில், தாக்குதல் நடத்திய நபர் குண்டை வெடிக்கச் செய்தபோது பலியானதாக சொல்லப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து, நீதிபதிகள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரையும் பத்திரமாக வெளியேற்றினர். மேலும் இந்த சம்பவம்  குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த தாக்குதல் அரங்கேறிய உச்ச நீதிமன்றம் அருகே நாடாளுமன்றம், அதிபர் மாளிகை என முக்கிய கட்டிடங்கள் அமைந்துள்ளதன காரணமாக, அங்கு  பாதுகாப்பு நலன் கருதி  நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சூழ்நிலையில், பிரேசிலில் வரும் 18-ம் தேதி ஜி-20 மாநாடு தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bomb explosion in the supreme court he attacker died in a shocking incident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->