பெருவில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 11 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


பெருவில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தென் அமெரிக்க நாடான பெருவின் தலைநகரமான லிமா நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 330 அடி செங்குத்தான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் பேருந்து பலமுறை உருண்டு பள்ளத்தில் விழுந்து உருக்குலைந்து உள்ளது.

இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த குழந்தைகள் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். மேலும் 34 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர், அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bus crashes into abyss in Peru


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->