சீனாவை மிரட்டும் புதிய வகை கொரோனா..!! ஒரே நாளில் 3.7 கோடி பேர் பாதிப்பு..!! - Seithipunal
Seithipunal


சீனாவில் இதுவரை அல்லாத அளவுக்கு கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக நாளொன்றுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனா மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இறந்தவர்களின் உடல் அடக்கம் செய்ய முடியாமல் சீன அரசு திண்டாடுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் ஊரடங்குக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் கொரோனா கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. அதன் விளைவாக கொரோனா பரவல் சீனாவில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் சீனாவில் 3.7 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. உலக அளவில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இனிவரும் காலங்களில் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona virus spreading has reached peak in China


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->