ஊழல் வழக்கு..முன்னாள் பிரதமர் கலிதா ஜியா விடுதலை! - Seithipunal
Seithipunal


ஊழல் வழக்கில் பழிவாங்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டது நிரூபணமாகியிருப்பதாக கூறி முன்னாள் பிரதமர் கலிதா ஜியா உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

1991-1996 மற்றும் 2001-2006 காலகட்டத்தில் வங்கதேசத்தில்  பிரதமராக பதவி வகித்தவர் கலிதா ஜியா (79).அப்போது வங்கதேச பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக்காலத்தின்போது அவரது கணவர் மறைந்த ஜியாவுர் ரஹ்மான் பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக சுமார் இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக நடந்த விசாரணையில் கலிதா ஜியா தனது பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி மிகப் பெரிய நிதி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கில் கலிதா ஜியா, அவரது மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டதுடன் வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், மற்றவர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தது பேசும் பொருளானது.

இந்தநிலையில் இதை எதிர்த்து கலிதா ஜியா உள்ளிட்ட 6 பேரும் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அப்போது  மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட் கலிதா ஜியாவுக்கான தண்டனையை இரட்டிப்பாக அதிகரித்து உத்தரவிட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் கலிதா ஜியா அப்பீல் செய்தார்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் ஐகோர்ட்டின் முந்தைய உத்தரவான 10 ஆண்டு சிறைத் தண்டனையை சுப்ரீம் கோர்ட் ரத்துசெய்து உத்தரவிட்டது.அத்துடன், பழிவாங்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டது நிரூபணமாகியிருப்பதாக கூறி கலிதா ஜியா உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corruption case Former PM Khaleda Zia acquitted


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->