மியான்மரில் சூறாவளி புயல் பாதிப்பால் பலி எண்ணிக்கை 226 ஆக உயர்வு! - Seithipunal
Seithipunal


தென்சீனக் கடலில் உருவான சூறாவளி யாகி புயல் பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு சீனா, வியட்நாம், லாவோஸ் மற்றும் மியான்மர் நாடுகளை கடுமையாக  யாகி புயல் தாக்கியது. இந்த சூறாவளி புயலால் கனமழையும் தொடர்ந்து பெய்தது. அதன் காரணமாக, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அங்கு  ஏற்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து,  சூறாவளி புயல் மக்களின் வாழ்க்கை நிலையை புரட்டி போட்டுள்ளது. இந்நிலையில், மியான்மரில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்பால் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 226 ஆக அதிகமாகி உள்ளது. மேலும், 77 பேர் காணாமல் போய் விட்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மியான்மர் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுடனான தகவல் தொடர்பு சிக்கல்கள் காரணமாக, உயிரிழப்பு எண்ணிக்கை மெதுவாக உள்ளது என அங்குள்ள அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.இந்த சூறாவளி யாகி புயல் முன்னதாக வியட்நாம், வடக்கு தாய்லாந்து மற்றும் லாவோசைத் கொடூரமாக தாக்கியது.

இந்த யாகி புயலால், தாய்லாந்தில் 42 பேரும், லாவோசில் 4, வியட்நாமில் 300 பேரும் பலியாகி உள்ளதாக தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஒருங்கிணைப்பு மையம் கூறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Death toll from cyclone in Myanmar rises to 226


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->