இறந்ததாக புதைக்கப்பட்ட பெண்.. உயிருக்கு போராடிய அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


பிரேசில் நாட்டில் 37 வயது பெண் ஒருவர் உயிரிழந்து விட்டதாக நினைத்து அவரை குடும்ப வழக்கப்படி உறவினர்கள் சவப்பெட்டியில் அடைத்து அடக்கம் செய்தனர். இந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டு 11 நாட்கள் ஆன நிலையில், அந்தப் பெண் புதைக்கப்பட்ட இடத்தில் பலர்கள் சத்தம் கேட்டுள்ளது.

மேலும் உள்ளிருந்து சவப்பெட்டியை தட்டும் சத்தமும் கேட்டதாக அந்த வழியாக சென்றவர் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக கல்லறையை தோண்டி சவப்பெட்டியை வெளியே எடுத்தனர்.

அந்த சவப்பெட்டியை திறந்து பார்த்தபோது உடல் அடக்கம் செய்யப்பட்ட போது இருந்ததை காட்டிலும், வேறு மாதிரியாக இருந்தது. மேலும் மூக்கு மற்றும் காதில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு கீழே கிடந்துள்ளது. அதேபோல் சவப்பெட்டியில் அடிக்கப்பட்டிருந்த ஆனி மேல்நோக்கி தள்ளப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சற்று நேரத்துக்கு முன்பு தான் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இவரை அடக்கம் செய்ததை நினைத்து உறவினர்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். மயக்கம்டைந்தவரை தவறுதலாக அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Death women return hospital in Brazil


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->