நான் இந்திய பிரதமர் மோடியின் ரசிகன் - எலான் மஸ்க்.!
Elon Musk speech about PM Modi
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக இந்தியா சென்றுள்ளார். அந்த வகையில் நேற்று இரவு நியூயார்க் சென்ற பிரதமர் மோடிக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து நியூயார்க் அரண்மனைக்கு சென்று பிரதமர் மோடி முக்கிய பிரபலங்களை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் பிரதமர் மோடி நியூயார்க்கில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ எலான் மாஸ்கை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் எலான் மஸ்க் பேசியதாவது, நான் மோடியின் ரசிகன் பிரதமர் மோடி இந்தியா மீது மிகவும் அக்கறை கொண்டுள்ளார். தொடர்ந்து முதலீடுகளை கேட்டு வருகிறார். அவர் உண்மையிலேயே இந்தியாவிற்கு தேவையானதை செய்ய விரும்புகிறார். அதே நேரத்தில் இந்தியாவிற்கு சாதகமாக செயல்படுகிறார். பிரதமருடன் இது ஒரு அற்புதமான சந்திப்பு நான் அவரை மிகவும் விரும்புகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் எங்கள் தொழிற்சாலைக்கு வருகை தந்தார் ஒருவரை ஒருவர் சிறிது காலமாக அறிந்திருக்கிறோம்.
மேலும் அடுத்த ஆண்டில் இந்தியா வர திட்டமிட்டுள்ளேன். ஸ்டார் லிங்க் இணைய சேவையை இந்தியாவிலும் கொண்டு வர விரும்புகிறேன். இது இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி சென்றடைய உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Elon Musk speech about PM Modi